Categories: Bike News

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

ஹார்லி-டேவிட்சன் X440

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியில் உருவான X440 மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.25,000 ஹார்லியின் டீலர்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் 440cc ஏர் ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் கொண்டிருக்கலாம்.

ஹார்லி-டேவிட்சன் X 440

ஹார்லி-ஹீரோ ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் முதல் தயாரிப்பு ஹார்லி-டேவிட்சன் X 440 ரோட்ஸ்டர் ஆகும். வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஹார்லி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.

தயாரிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையை ஹீரோ மோட்டோகார்ப் கவனித்துக் கொள்ளும். டீலர்ஷிப் மூலம் முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. 25,000 முன்பணம் செலுத்தி X440 பைக்கினை முன்பதிவு செய்யலாம்.

X440 ஆனது 440cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 40 bhp பவர் மற்றும் 35 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் இடம்பெற்றிருக்கலாம்.

ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் பின்புறம்

ட்யூபுலர் ஃப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள X 440 பைக்கில் அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்  முன்புறத்தில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் வீலுடன் எம்ஆர்எஃப் டயரினை பெற்றுள்ளது.

ஜூலை 3, 2023-ல் ஹார்லி-டேவிட்சன் X 440 விலை ரூ.2.50 லட்சம் என அறிவிக்கப்படலாம்.

Recent Posts

புதிய ஸ்டைலில் ஹீரோ டெஸ்டினி 125 அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…

1 day ago

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…

1 day ago

அக்டோபர் 3ல் கியா கார்னிவல் எம்பிவி இந்திய அறிமுகம்

கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…

2 days ago

சிஎன்ஜி ஹூண்டாய் ஆரா செடானில் E வேரியண்ட் அறிமுகம்

ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…

2 days ago

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…

2 days ago

குறைந்த விலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சன்ரூஃப் வேரியண்ட் அறிமுகம்

துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…

2 days ago