Automobile Tamilan

தொடக்கநிலை டூவீலர் சந்தையிலிருந்து வெளியேறும் மஹிந்திரா

கடந்த 2008 ஆம் ஆண்டு கைனெட்டிக் பிராண்டை கைப்பற்றிய  மஹிந்திரா நிறுவனம் டூவீலர் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. ஆரம்பகட்டத்தில் ஒரளவு சிறப்பான வரவேற்பை ஸ்கூட்டர் மற்றும் பைக் சந்தையில் பெற்றாலும் நஷ்டத்திலே இயங்கி வந்தது.

மஹிந்திரா டூவீலர்

மஹிந்திரா நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரிவு 9 ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதனால் தொடக்கநிலை சந்தையிலிருந்து வெளியேறுவதாக மணிகன்ட்ரோல் வணிக இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக கடந்த நிதி ஆண்டில் ரூ. 476 கோடி வரை இந்நிறுவனம் இழப்பிட்டை சந்தித்துள்ளது.

 

ஆரம்பத்தில் தொடக்கநிலை சந்தையில் மஹிந்திரா வெளியிட்ட டியூரோ, ரோடியோ, கஸ்ட்டோ ஸ்கூட்டர்கள் மற்றும் செஞ்சூரா உள்ளிட்ட மாடல்கள் பெரிதான அளவில் ஆதரவினை பெறாத நிலையில் பிரிமியம் ரக சந்தையில் வெளியிடப்பட்ட ஸ்போர்ட்டிவ் டூரர் மஹிந்திரா மோஜோ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளதை தொடர்ந்தும், தொடக்கநிலை சந்தையில் பெரிதாக சந்தை மதிப்பினை பெறதாக நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 77 சதவிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

சியாம் அறிக்கையின்படி, தற்போது மொத்த ஆட்டோமொபைல் சந்தையில் 0.09 சதவித பங்களிப்பை மட்டுமே மஹிந்திரா இருசக்கர வாகனம் நிறுவனம் பெற்றுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் பிராண்டுகளான பிஎஸ்ஏ மற்றும் ஜாவா பிராண்டுகளை தவிர 51 சதவித பங்களிப்பை பீஜோ டூவீலர் நிறுவனத்தில் பெற்றுள்ள மஹிந்திரா தொடக்கநிலை சந்தையை புறக்கணித்து விட்டு, 300சிசி க்கு மேற்பட்ட பிரிவில் ஜாவா பைக் பிராண்டு மற்றும் மோஜோ உள்ளிட்ட மாடல்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதியில், மீண்டும் ஜாவா யெஸ்டி பைக்குகள் இந்தியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version