• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சேட்டக்கை அடுத்து சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டம்

by MR.Durai
15 November 2019, 5:38 pm
in Bike News
0
ShareTweetSend

bajaj chetak headlight

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் ஜன்வரி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் அடுத்த அதிக சக்தி மற்றும் ரேஞ்சு பெற்ற மின்சார மாடலை கேடிஎம் அல்லது ஹஸ்குவர்ணா பிராண்டில் உற்பத்தி செய்ய உள்ளதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.

நேற்றைக்கு நடைபெற்ற பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் யாத்ரா நிறைவு நிகழ்ச்சியில் பேசிய ராஜீவ் பஜாஜ் அடுத்த மின்சார தயாரிப்பு குறித்த கூடுதல் விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இந்த பைக் தயாரிப்பாளரின் சேட்டக்கின் புதிய சக்திவாய்ந்த பதிப்பினை தயாரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கேடிஎம் / ஹஸ்குவர்ணா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும்.

இந்த புதிய மாடல் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாகும், இந்த பிரீமியம் பைக் பிராண்டின் பெயரில் வரவுள்ளதால் மிகவும் நவீனத்துவமான வடிவமைப்பினை கொண்டு ஸ்டைலிஷான தோற்றப் பொலிவு சிறப்பான பவர் மற்றும் ரேஞ்சுடன் அமைந்திருக்கும்.

அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் ரூ.1.30 லட்சத்தில் பஜாஜ் சேட்டக் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில் சக்திவாய்ந்த மாடல்கள் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

Tags: Bajaj Chetak
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version