Automobile Tamilan

புதிய நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்ட சுசூகி

2025 Suzuki Avenis dual tone

சுசூகியின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஸ்கூட்டராக விளங்கும் அவெனிஸ் 125யில் கூடுதலாக புதிய மெட்டாலிக் மேட் பிளாட்டினம் வெள்ளி எண். 2 / கண்ணாடி ஸ்பார்க்கிள் கருப்பு நிறத்தை நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.

புதிய நிறத்தை தவிர மற்றபடி, எவ்விதமான மாற்றங்களும் இல்லை, விலை உயர்வும் இல்லை. அவெனிஸ் 125 மாடலில்  124cc இன்ஜின்  6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10.2 Nm டார்க் வெளிப்படுத்தம் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

21.8 லிட்டர் பூட்ஸ்பேஸ் உள்ள இந்த மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஒற்றை சாக் அப்சார்பர் டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டு ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் திரு. தீபக் முத்ரேஜா, புதிய நிறம் குறித்து அவர் கூறுகையில்,

“சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில், ரைடர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை பிரதிபலிக்கும் தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவெனிஸில் உள்ள புதிய நிறம் அதன் ஸ்போர்ட்டி ஆளுமைக்கு ஒரு தைரியமானதை சேர்க்கிறது மற்றும் எங்கள் இளம் வாடிக்கையாளர்களுக்கு தெருக்களில் தங்கள் பாணியை வெளிப்படுத்த மற்றொரு அற்புதமான வழியை வழங்குகிறது. இந்த கூடுதலாக, உற்சாகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதே வேளையில், அவெனிஸின் கவர்ச்சியை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம்.” என்றார்.

Exit mobile version