• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.64,000 விலையில் பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகமானது

by MR.Durai
13 August 2019, 5:44 pm
in Bike News
0
ShareTweetSend

பஜாஜ் பல்சர் 125 நியான்

பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலை பல்சர் தொடர் மாடலாக பஜாஜ் பல்சர் 125 நியான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீலர்களை வந்தடைந்துள்ள புதிய பஜாஜின் 125சிசி என்ஜின் பெற்ற மாடலான இந்த பைக்கின் விலை ரூபாய் 64,000 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) நிர்ணையம் செய்யப்பட உள்ளது.

புதிய 125 சிசி பல்சர் வரவிருக்கும் பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 124.45 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.8 பிஹெச்பி  6,000 ஆர்பிஎம்மில் மற்றும் 11.5 என்எம் டார்க்கை வழங்கும் என கருதப்படுகின்றது. இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரக்கூடும்.

பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.. பல்ஸர் 150 பைக்கில் உள்ளதை போன்ற ஸ்டைலிங் அம்சங்களை பெற்ற பல்சர் 125 ஒரு புதிய ஹெட்லைட் கவுல் பேனலை கொண்டிருப்பதுடன் புதிய பாடி கிராபிக்ஸ், ஒரே வகையான இருக்கை மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பல்ஸர் 125 பைக்கில் நியான் ப்ளூ, சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சில்வர் என மூன்று வண்ணங்கள் கிடைக்க உள்ளது.

 

டிஜிட்டல் அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் கூடியதாக வந்துள்ள இந்த பைக்கில் மிக நீளமான இருக்கை கொண்டதாக வந்துள்ளது. பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூபாய் 64,000 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய் 66,618 (டிஸ்க் பிரேக்) (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும். மேலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள பெல்லி பேன் மற்றும் டேங்க் எக்ஸடென்சனை 125சிசி மாடல் இழந்துள்ளது.

 

Tags: bajaj autoBajaj Pulsar 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version