Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது | Automobile Tamilan

ரூ.6.95 லட்சத்தில் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 விற்பனைக்கு வந்தது

a4480 triumph trident 660

ட்ரையம்ப் நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் நேக்டூ  ரோட்ஸ்டெர் மாடலான புதிய ட்ரைடென்ட் 660 பைக்கினை இந்தியாவில் விற்பனைக்கு ரூ.6.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட மாடல் தற்போது இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மாடலில் இன்லைன் மூன்று சிலிண்டர் 660சிசி இன்ஜின் பெற்றுள்ள ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 மாடல் அதிகபட்சமாக 81hp பவர் மற்றும் 64Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு கூடுதலாக சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரிஸ் மூலமாக க்விக் ஷிஃப்டரை பெறலாம்.

முன்புறத்தில் ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன், பின்புற டயரில் சிங்கிள் பிஸ்டன் காலிப்பர் டிஸ்க் மற்றும் முன்புறத்தில் இரண்டு பிஸ்டன் காலிப்பருடன் கூடிய 310 மிமீ இரட்டை டிஸ்க்குகள் இணைக்கப்பட்டுள்ளது.

850 மிமீ இருக்கை உயரம், 17 அங்குல வீல் உடன் ட்யூபெலர் ஸ்டீல் சேஸிஸ் கொண்டுள்ள ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 பைக்கின் எடை 189 கிலோ மட்டுமே ஆகும்.

Exit mobile version