Automobile Tamilan

ஓபென் ரோர் EZ எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வெளியானது

oben rorr ez electric

ஓபென் நிறுவனத்தின் புதிய ரோர் EZ எலெக்ட்ரிக் பைக் மாடல் ரூ.89,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. ரோர் இசட் மாடலில்  LFP நுட்பத்தை பயன்படுத்தி 2.6kWh, 3.4kWh மற்றும் 4.4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

அனைத்து பேட்டரி விருப்பங்களும் 7.5kW மோட்டார் மூலம் 52Nm டார்க் வெளியீட்டை வழங்கும் நிலையில் Rorr EZ மாடல் அதிகபட்சமாக 95kmph வேகத்தில் பயணிக்கவும், பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தில் 3.3 வினாடிகளில்  எட்ட முடியும். மற்றபடி, இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடலில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் கொண்ட 17-இன்ச் அலாய் வீல்களை பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

ஸ்டாண்டர்ட் சார்ஜருடன் 2.5 kWh பேட்டரிக்கு 4 மணிநேரம் ஆகும், 3.4 kWh மாடலுக்கு 5 மணிநேரம் மற்றும் 4.4 kWh வேலியண்டுக்கு 7 மணிநேரம் ஆகும். கூடுதல் ஆப்ஷனலாக உள்ள வேகமான சார்ஜர் மூலம், முறையே 45 நிமிடங்கள், 1 மணிநேரம் 30 நிமிடங்கள் மற்றும் 2 மணிநேரங்களில் 0 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யப்படுகிறது.

Exit mobile version