ஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது

வரும் ஜனவரியில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஒகினவா ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவு இந்தியளவில் தொடங்கப்பட்டுள்ளது.

ரூ.5000 முன்பதிவு தொகையாக செலுத்தி ஐ- பிரெயஸ் மின்சார ஸ்கூட்டருக்கு நாடு முழுவதும் உள்ள ஒகினவா டீலர்கள் வாயிலாக  தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்கூட்டர் குறித்தான முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஐ- பிரெயஸ் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 1000 Watt, BLDC மின் மோட்டார் அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டடர் மணிக்கு 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் வழங்குவதுடன், இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி மிக எளிமையாக கழற்றி மாட்டும் வசதியுடன் , இந்த லித்தியம் அயான் பேட்டரி (மற்ற லெட் ஆசிட் பேட்டரியை விட 40 சதவீத எடை குறைவானதாகும்) முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளும், இதன் முக்கிய அம்சமாக முழுமையான சார்ஜிங் நேரத்தில் அதிகபட்சமாக 160 முதல் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி பகல்நேர விளக்குகள், இ- ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட் மற்றும் திருடுவதனை தடுக்கும் அலாரம் உட்பட நவீன வசதிகளை பெற்ற ஒகினவா ஐ – பிரெயஸ் ஸ்கூட்டர் விலை ரூ.  59,889 (விற்பனையக விலை டெல்லி). முதற்கட்டமாக 500 முன்பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாதம் டெலிவரி வழங்கப்பட உள்ளது.