மேம்பட்ட புதிய ஒகினவா ப்ரைஸ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஐ ப்ரைஸ்+ மற்றும் ப்ரைஸ் புரோ என இரு மாடல்களிலும் மேம்பட்ட திறன் மற்றும் சிறப்பான கையாளுதலை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஒகினவா ஆட்டோடெக் நிறுவனமும், இத்தாலியைச் சேர்ந்த Tacita நிறுவனமும் இணைந்து முதல் உலகளாவிய R&D மையத்தை ஐரோப்பாவில் துவங்கியதை தொடர்ந்து வெளியான முதல் மேம்பட்ட மாடலாகும். இதனை தொடர்ந்து பல்வேறு மேம்பட்ட மற்றும் பதிய மாடல்கள் வெளியாகும்.

2023 Okinawa Praise Pro, iPraise Plus

புதிய ஒகினாவா பிளாட்ஃபாரம் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்ட புதிய Praise Pro மற்றும் iPraise Plus ஆகியவை இப்போது 40mm டவுன் ஃபிரேம் (சேஸ்) பெற்றுள்ளன. மேலும், இரண்டு மின்சார ஸ்கூட்டர்களும் இப்போது வண்ண டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் AIS-156 அம்சத்துக்கு ஏற்றது என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்ப நிலை 2.08KWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் பெறுகின்ற ப்ரைஸ் புரோ மாடலின் ரேஞ்சு 81 கிமீ , iPraise+ மாடலின் ரேஞ்சு 137கிமீ ஆக உள்ள மாடலில் 3.6 KWh பேட்டரி பேக் உள்ளது.

இரு ஸ்கூட்டர்களும் பொதுவாக 90/90-12 டயர் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றதாகவும், மணிக்கு அதிகபட்சமாக 56 கிமீ வேகத்தில் செல்ல இயலும்.

2023 okinawa Praise Pro – ₹.99,465

2023 okinawa iPraise+ – ₹ 1,45,965

(எக்ஸ்ஷோரூம் விலை)

வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒகினாவா இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம்.

Share