Automobile Tamilan

நாடு முழுவதும் 500 ஷோரூம்களை திறந்த ஓலா எலக்ட்ரிக்

ola 500th Experience Centre

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பபாளரான ஓலா எலக்ட்ரிக் நாடு முழுவதும் 500 சேவை மையங்களை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட மாத இறுதிக்குள் 1,000 ஷோரூம்களை துவக்க திட்டமிட்டுள்ளது.

D2C முறையில் விற்பனை செய்கின்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 300க்கு மேற்பட்ட நகரங்களில் சுமார் 500 Experience Centre துவங்கியுள்ளது. 500வது மையம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகரில் துவங்கப்பட்டுள்ளது.

Ola Electric

ஓலா S1 Air, S1, S1 pro என மூன்று மாடல்களில் பல்வேறு மாறுபட்ட பேட்டரி திறன் பெற்றதாக அமைந்துள்ளது.

எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் 85Km/hr ஆக உள்ளது. 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.

S1 ஸ்கூட்டரில் 2kWh, மற்றும் 3kWh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் மாடலாக S1 புரோ பேட்டரி ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த 4 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்ச வேகம் 116Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 181km ரேஞ்சு வழங்குகின்றது.

Exit mobile version