Automobile Tamilan

குறைந்த விலை ஓலா S1X ஸ்கூட்டரின் டெலிவரி தொடங்கியது

ஓலா S1X எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் குறைந்த விலை மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்ட S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2kWh, 3kWh, மற்றும் 4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

ரூ.70,000 விலையில் துவங்குகின்ற S1X 2Kwh பேட்டரி உள்ள இ-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்று மலிவு விலையில் 95km ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் உண்மையான வரம்பு 70 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது.

ரூ.85,000 விலையில் கிடைக்கின்ற 3kwh பேட்டரி பேக் கொண்ட எஸ்1 எக்ஸ் வேரியண்ட் அதிகபட்சமாக 143 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றளிக்கப்பட்டு நிகழ்நேரத்தில் 100-110 கிமீ வழங்கலாம்.

ரூ.99,999 விலையில் டாப் 4kwh பேட்டரி பேக் கொண்ட வேரியண்ட் அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ள நிலையில் உண்மையான ரேஞ்ச் 150 கிமீ வழங்கலாம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட S1X தொடர்ந்து பல்வேறு காரணங்களால் டெலிவரி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது விநியோகம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க –  பெண்களுக்கான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

 

Exit mobile version