Automobile Tamilan

2025ல் வரவுள்ள ஓலா Gen 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபரம்

Ola gen3 escootersஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்ததாக மூன்றாம் தலைமுறை ஸ்கூட்டர் வரிசையை இந்தியாவில் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை இந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.

குறிப்பாக புதிதாக வரவுள்ள ஸ்கூட்டரின் அலுமினியம் ஸ்ட்ரெஸ்டு ஃபிரேமில் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த அம்சங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாக வழங்கப்பட்டிருக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

தற்பொழுது பயன்படுத்தப்பட்ட வருகின்றார் 2170 பேட்டரி செல்களை விட இந்த புதிய செல்கள் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கின்றது.

இது தவிர முக்கியமாக ஓலா நிறுவனம் தனது சொந்தமாக நான் தயாரிப்பாக வெளியிட்டுள்ள பாரத்செல் எனப்படுகின்ற 4680 செல்களை பேட்டரிக்கு பயன்படுத்தி கூடுதலான பவர் மற்றும் சிறப்பான ஆற்றல் சேமிப்புத் திறனை கொண்டதாகவும் அதிக ரேஞ்ச் மற்றும் அதிக சார்ஜிங் சைக்கிள் கொண்டிருக்கும் இந்த பேட்டரிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

மேலும் தற்பொழுது உள்ள மாடல்களில் உள்ள சிக்கலான ஒயரிங் சிஸ்டத்தை மிக எளிமையாக மாற்றி அமைத்து இருப்பதுடன் கூடுதலாக பல்வேறு ப்ராசஸர்கள் பெற்றுள்ள GEN 1 மற்றும் GEN 2 மாடல்களை விட குறைவான பிராசஸர்களை இந்த புதிய மாடல் பெற உள்ளது.

கூடுதலாக இந்நிறுவனம் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ஏற்ற ADAS டிரைவிங் சிஸ்டத்தை தயாரித்து வருகின்றது. அதனுடைய சாராம்சங்களையும் இந்த புதிய ஓலா GEN 3 ஸ்கூட்டர்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஓலா நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எலக்ட்ரிக் பைக்குகளான ரோட்ஸ்டெர் வரிசையை விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் அதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களிலேயே அதாவது ஏப்ரல் மாதத்தில் அநேகமாக இந்த புதிய Gen 3 வரிசை ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வெளியாகலாம்.

 

Exit mobile version