Automobile Tamilan

புதிய நிறத்தில் S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்ட ஓலா எலக்ட்ரிக்

Ola S1 Air force neon colour

வரும் ஜூலை 28 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஓலா S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிதாக நியான் நிறத்தை உறுதிப்படுத்தி டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் அறிமுகம் சலுகையாக ரூ.1.09 லட்சத்திற்கும் கிடைக்கும்.

அறிமுக சலுகை விலை ஜூலை 28 முதல் ஜூலை 30 வரை மட்டும் முன்பாக ஓலா ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தற்பொழுது முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ரூ.10,000 குறைவான விலையில் கிடைக்கும். ஜூலை 31 ஆம் தேதி முதல் ஓலா எஸ்1 ஏர் வாங்குபவர்களுக்கு ரூ.1,19,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Ola S1 Air escooter

S1 ஏர் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 90KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.

முழுமையான சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 125 கிலோ மீட்டர் ரேஞ்சு வழங்கும் என ஓலா தெரிவித்துள்ளது.

S1 ஏர் ஸ்கூட்டரின் பரிமாணங்கள் 1865 மிமீ நீளம், 710 மிமீ அகலம் மற்றும் 1155 மிமீ உயரம் கொண்டுள்ளது. 1385 மிமீ வீல்பேஸ், 792 மிமீ இருக்கை நீளம், 738 மிமீ இருக்கை உயரம், 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட ஸ்கூட்டரின் கெர்ப் எடை 107 கிலோ மற்றும் பூட் கொள்ளளவு 34 லிட்டர் ஆகும்.

 

Exit mobile version