Automobile Tamilan

ஓலா S1X vs S1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்சு ஒப்பீடு

ola-s1x vs s1 air electric scooter

ரூ.1.20 லட்சத்தில் அமைந்துள்ள இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான ஓலா S1X, S1X+ Vs S1 Air ஆகிய நான்கு மாடல்களின் ரேஞ்சு, பெர்ஃபாமென்ஸ், வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்து சிறந்த மற்றும் நமக்கு ஏற்ற மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.

குறைந்த விலையில் வந்துள்ள எஸ்1எக்ஸ் மற்றும் எஸ்1ஏர் மாடல்கள் சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஏதெர் 450எஸ் ஸ்கூட்டருடன் போட்டியிடுவதுடன் டிவிஎஸ் அறிமுகம் செய்ய உள்ள குறைந்த விலை ஐக்யூப் மாடலையும் எதிர்கொள்ள உள்ளது.

Ola S1X vs S1X+ vs S1 Air

ரூ.90,000 முதல் ரூ.1.20 லட்சம் விலைக்குள் அமைந்துள்ள ஓலா எஸ்1எக்ஸ், ஓலா எஸ்1எக்ஸ் பிள்ஸ் மற்றும் எஸ1 ஏர் ஸ்கூட்டர்கள் 2Kwh மற்றும் 3Kwh பேட்டரி ஆப்ஷனை பயன்படுத்திக் கொண்டு வழக்கமான ஓலா ஸ்கூட்டர்களை போலவே அமைந்துள்ளது.

S1X ஸ்கூட்டரில் உள்ள மூன்று வேரியண்டில் 2Kwh பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளும் மாடல் சிங்கிள் சார்ஜில் 91 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, 3kwh பயன்படுத்திக் கொள்ளும் S1X 3kwh, S1X+ மற்றும் S1 Air சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றயளிக்கப்பட்டுள்ளது.

Ola Specs S1X  S1X+, S1X 3kwh S1 Air
மோட்டார் வகை Hub Hub Hub
பேட்டரி 2Kwh 3kwh 3kwh
பவர் 2.7kw/6kW 2.7kw/6kW 2.7kw/6kW
டார்க்
ரேஞ்சு (IDC) 91 Km/charge 151 Km/charge 151 Km/ch
ரைடிங் ரேஞ்சு 60-75 Km/charge 120-125 Km/charge 120-125km/ch
அதிகபட்ச வேகம் 85 Kmph 91 Kmph 91 Kmph
சார்ஜிங் நேரம் 7 hrs 40 Mins 7 hrs 40 mins 5 hrs
ரைடிங் மோடு Eco, Normal, Sports Eco, Normal, Sports Eco, Normal, Sports

சார்ஜிங் நேரத்தை பொறுத்தவரை வீட்டிலுள்ள சார்ஜரை பயன்படுத்தினால் S1X, S1X 3kwh , S1X+ என மூன்றும் 7 மணி நேரம் 40 நிமிடமும், S1 ஏர் மாடல் 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். S1X+, S1X 3kwh என இரண்டு மாடலும் 500 வாட்ஸ் சார்ஜருடன் வருகின்றது. S1X 2kwh மாடல் 500 வாட்ஸ் சார்ஜருடன், S1 ஏர் மாடல் 750 வாட்ஸ் சார்ஜரை பெறுகின்றது.

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

நான்கு மாடல்களுமே சஸ்பென்ஷன் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர், இரு டயர்களில் டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் அமைப்பு என அனைத்திலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றது. பொதுவாக அனைத்து மாடலிலும் 90/90-12 டயராக உள்ளது.

Specs S1X/S1X+ S1 Air
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன் மோனோஷாக் மோனோஷாக்
பிரேக்கிங் சிஸ்டம் CBS CBS
முன்பக்க பிரேக் 130 mm டிரம் 130 mm டிரம்
பின்பக்க பிரேக் 130 mm டிரம் 1300 mm டிரம்
வீல் F/R 90/90-12 (F/R) ட்யூப்லெஸ் 90/90-12(F/R) ட்யூப்லெஸ்

பரிமாணங்கள் ஒப்பீடு

Specs S1X/S1X+ S1 Air
எடை 101 Kg/108kg 108 Kg
இருக்கை உயரம் 805mm 805mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 160mm 160mm
நீளம் 1,860mm 1,860mm
அகலம் 738mm 738mm
உயரம் 1,298mm 1,298mm
வீல் பேஸ் 1,359mm 1,359mm
சேசிஸ் ட்யூப்லெர் ட்யூப்லெர்

ஓலா S1X, ஓலா S1X+ மற்றும் S1 Air என நான்கு மாடலுமே ஒரே மாதிராயான நுட்ப விபரங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன.

மிக முக்கியமான வித்தியாசங்கள்

S1X 2kwh மற்றும் S1X 3kwh என இரு மாடலிலும் 3.5 அங்குல கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இல்லாமல் வந்துள்ளது. வழக்கமான கீ ஆனது இடம்பெற்றுள்ளது.

ஓலா S1X+ வேரியண்டில் 5 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த OTA மேம்பாடு, ம்யூசிக், நேவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களை பெற்றதாக உள்ளது. மேலும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

ஓலா S1 ஏர் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்த OTA மேம்பாடு, ம்யூசிக், நேவிகேஷன், க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களை பெற்றதாக உள்ளது. மேலும் கீலெஸ் அன்லாக் உள்ளது.

விலை ஒப்பீடு

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நான்கு ஸ்கூட்டர் மாடல்களும் வெவ்வேறு விதமான பேட்டரி மற்றும் ரேஞ்சு கொண்டிருந்தாலும் வடிவமைப்பில் ஒரே மாதிரியாகவும், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மாற்றமில்லாமல் அமைந்துள்ளது.

Model Ex-Showroom  Tamil Nadu
Ola S1X Rs.89,999
Ola S1X Rs.99,999
Ola S1X+ Rs.1,09,999
Ola S1 Air Rs.1,19,999

Ola S1X S1X+ Vs Ola S1 Air On-road Price in Tamil Nadu

ஓலா எஸ்1 வரிசை மாடல்கள் ஏதெர் 450s, டிவிஎஸ் ஐக்யூப், விடா வி1, போன்ற மாடல்களுடன் பல்வேறு போட்டியாளர்கள் இந்த ஸ்கூட்டர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன. தோராயமான ஆன்-ரோடு விலை குறிப்பிடப்பட்டுள்ளது.

Model on-Road  Tamil Nadu
Ola S1X Rs1,01,269
Ola S1X Rs.1,12,658
Ola S1X+ Rs.1,23,679
Ola S1 Air Rs.1,34,040

மேலும் படிக்க – ஓலா S1 Air Vs S1 Pro Gen1 ஒப்பீடு

ஏதெர் 450S vs 450X ஒப்பீடு

Exit mobile version