Automobile Tamilan

ஆர்க்ஸா மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக்கின் அறிமுக விபரம்

orxa mantis electric bike

முரட்டுத்தனமான தோற்றத்தை பெற்ற ஆர்க்ஸா எனர்ஜிஸ் நிறுவனத்தின் மாண்டிஸ் (Orxa Energies Mantis) எலக்ட்ரிக் பைக் மாடலின் உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வெளியாகலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆர்க்ஸா மாண்டிஸ் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் 200 கிமீ ரேஞ்சு வழங்கும் சக்திவாய்ந்த மாடலாக விளங்கும் என உறுதிப்படுத்தப்பட்டது.

Orxa Mantis E-Bike

பெங்களூருவில் ஆர்க்ஸா எனர்ஜிஸ் தனது முதல் தொழிற்சாலையை ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலையில் ஆண்டுக்கு 20,000 மின்சார மான்டிஸ் பைக்குகளை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், மான்டிஸ் அசெம்பிளி ஸ்டேஷன், பேட்டரி அசெம்பிளி லைன் மற்றும் தயாரிப்பு சோதனை மையம் ஆகியவற்றிற்கும் இடமளிக்கிறது.

ஆர்க்ஸா மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் வாகன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி மற்றும் அசெம்பிளி முறைகளை பெருமளவில் மேம்படுத்துவதற்கு ஆர்க்ஸா எனர்ஜிஸ் தனது வலுவான பொறியியல் திறமையை செயல்படுத்தி வருகின்றது.

ஆர்க்ஸா இ-மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர் மாண்டிஸ் பைக்கில் 9 kWh லித்தியம் ஐயன் பேட்டரியை கொண்டுள்ள மாடல் அதிகபட்சமாக 28 kW பவர் மற்றும் டார்க் 105 Nm வெளிப்படுத்தும். டாப் ஸ்பீடு 140km/hr வேகத்தை எட்டுவதுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 200 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுதப்பட்டுள்ளது.

ஆறு பிரிவுகளாக பேட்டரியை பிரித்து மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டு இந்த மாடலில் முழுமையான சார்ஜிங் செய்ய 4 மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

இந்நிறுவனம், பல்வேறு முக்கிய மாநகரங்களில் டிராக் தினத்தை கொண்டு பைக்கினை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்ய அனுமதிக்க உள்ளதால் முன்பதிவு இந்நிறுவன இணையதளத்தில் நடைபெறுகின்றது.

2023 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டு உடனடியாக டெலிவரி வழங்கப்படலாம்.

Orxa Mantis Image Gallery

Exit mobile version