ரிவோல்ட் பைக்கின் சிங்கிள் சார்ஜில் 156 கிமீ பயணிக்கலாம்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ரிவோல்ட் மின் மோட்டார்சைக்கிளின் முதல் பைக் மாடலின் திறன் சிங்கிள் சார்ஜ் மூலம் அதிகபட்சமாக 156 கிமீ பயணிக்கலாம் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் (Revolt Intellicorp) நிறுவனத்தின் மாடல் இந்தியாவின் முதல் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பெற்றதாக வரவுள்ள பைக்கில் உள்ள மின் மோட்டார் என்ஜின் அதிகபட்சமாக 10.2 டிகிரி கோண சரிவினில் சிரமமின்றி பயணிக்க உதவும் என தகவல் குறிப்பிட்டுள்ளது.

ரிவோல்ட் பைக் மைலேஜ் விபரம்

முதற்கட்டமாக மூன்று மோட்டார்சைக்கிளை வெளியிட திட்டமிட்டுள்ள ரிவோல்டின் முதல் மாடல் சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது.

சரிவு திறன் சார்ந்த சோதனையில் (Gradient Ability Test) 10.2 டிகிரி கோணத்தில் உள்ள சரிவிலும் மிக இலகுவாக பயணிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக இந்த பைக்கின் செயல்திறன், பேட்டரி லைஃப் சுழற்சி , ஆணி ஊடுருவல், அதிர்ச்சியை தாங்கும் திறன், அனைத்து காலநிலை சார்ந்த சோதனை மற்றும் நீரிலிருந்து பாதுகாக்கும் அம்சம் உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக ரிவோல்ட் அமைந்திருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த பைக்குகள் , இந்தியாவில் விற்பனைக்கு ஜூன் 2019-ல் திட்டமிடப்பட்டுள்ளது. 100-125சிசி வரையில் விற்பனை செய்யப்படுகின்ற பாரம்பரிய என்ஜின் மாடல்களுக்கு சவாலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share