Automobile Tamil

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் விலை விபரம் வெளியானது

மிக நீண்டகாலாமக உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 650 சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ட்வின்ஸ் என அழைக்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 ஆகிய இரு பைக்குகளை ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்

கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட 650சிசி கொண்ட இந்த இரட்டையர்கள் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்ல உள்ள நிலையில் ஆஸ்திரேலியா சந்தையில் பார்வைக்கு ஏற்றுமதி செய்துள்ள மாடல்களின் வாயிலாக விலை விபரங்கள் கசிந்துள்ளது.

இங்கிலாந்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு டெக்னிக்கல் சென்டர் மற்றும் ஹாரீஸ் பெர்ஃபாமென்ஸ் இணைந்து உருவாக்கப்பட்ட அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் கேஸ் நிரம்பிய ட்வீன் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

மேலும் இரு மாடல்களிலும் முன் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ள இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரு பைக் மாடல்களில் ஏர் மற்றும் ஈயில் கூலிங் 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டயர் 100/90-18 மற்றும் பின்புறத்தில் டயர் 130/70-18 சக்கரங்களில் 18 அங்குல ஸ்போக் வீலுடன், இரட்டை பிரிவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவினை வழங்கும் காட்டும் கருவி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

எரிபொருள் இல்லாமல் 202 கிலோ கிராம் எடை கொண்டுள்ள இன்டர்செப்டார் 650 (198 கிலோ கான்டினென்டினல் ஜிடி) மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 804 மீமீ இருக்கை உயரம் பெற்றுள்ளதால் சற்று உயரம் குறைவானவர்களும் மோட்டார்சைக்கிளை கையாளுவதற்கு எளிமையாக அமைந்திருக்கும்.

ஆஸ்திரேலியா சந்தையில் பார்வைக்கு சென்னையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்குகளின் விலை விபரங்கள் வெளியாகி உள்ளது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ஆஸ்திரேலியா டாலர் 10,000 (ரூ.5 லட்சம்)

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 ஆஸ்திரேலியா டாலர் 10,400 (ரூ. 5.20 லட்சம்)

ஆஸ்திரேலியா சந்தையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள மாடல்களின் அடிப்படையில், இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் விலை ரூ.4 லட்சத்துக்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது. இதனை விட ரூ.20,000 வரை கூடுலான விலையில் கான்டினென்டினல் ஜிடி 650 பைக் விலை அமைந்திருக்கும். விற்பனைக்கு வரும் நாட்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

Exit mobile version