Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு மாடல்களுக்கு பராமரிப்பு கட்டணம் குறைகிறது

Royal-Enfield-Bullet-350

UCE  பெற்ற அனைத்து ராயல் என்ஃபீல்டு புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு உரிமையாளர்களுக்கும் புதிய சர்வீஸ் முறையை என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு 12 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 10,000 கிமீ -க்கு ஒரு முறை ஆயில் சர்வீஸ் செய்தால் போதுமானது என அறிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், விற்பனை செய்து வருகின்ற unit construction engine எனப்படுகின்ற யூசிஇ பெற்ற மாடல்களான புல்லட், கிளாசிக், மற்றும் தண்டர்பேர்டு மாடல்களின் மூன்று ஆண்டுகளில் பராமரிப்பு கட்டணத்தை 40 சதவீதம் குறைக்கும் திட்டத்தை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

புதிய நடைமுறையின் படி, என்ஜின் ஆயில் சர்வீஸ் முறையில் புதிதாக செமி சிந்தெட்டிக் ஆயில் சேர்க்கப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் 6 மாதம் அல்லது 5,000 கிமீ ஒரு முறை பொதுவான சோதனை மற்றும் ஆயில் லெவல் செக்கப் போன்றவை மேற்கொள்ளப்படும். முன்பாக இந்த நடைமுறை ஒவ்வொரு 3 மாதல் அல்லது 3,000 கிமீ ஒரு முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஒவ்வொரு ஆயில் மாற்றப்படுகின்ற சர்வீஸ் முன்பாக 6 மாதம் அல்லது 6,000 கிமீ ஆக இருந்தது. இனி, ஆயில் சர்வீஸ் ஒவ்வொரு 12 மாதங்கள் அல்லது 10,000 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாடல்கள் மட்டுமல்ல விற்பனை செய்யப்பட்ட அனைத்து UCE மாடல்களுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் புல்லட் 350 ES என இரு மோட்டார்சைக்கிள்களிலும் குறைந்த விலை மாடலை விற்பனைக்கு மொத்தம் 6 நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. அடுத்த தலைமுறை கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு மாடல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

Exit mobile version