ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் மீது வரவேற்பில்லை

bullet trials

புல்லட் தயாரிப்பாளரின் பிரதி மாடலாக வெளியான ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350 மற்றும் டிரையல்ஸ் 500 மாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரண்டு விதமான பயன் முறைக்கும் ஏற்ற வகையில் வெளியிடப்பட்டது.

ராயல் என்ஃபீல்ட் புல்லட் ட்ரையல்ஸ் ஒர்க்ஸ் பிரதி 1948 மற்றும் 1965 க்கு இடையில் 50 க்கும் மேற்பட்ட சாம்பியன்ஷிப்பை வென்ற ஜொன்னி பிரிட்டனின் சோதனை மோட்டார் சைக்கிளால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகும்..

350சிசி மற்றும் 500சிசி என்ஜின் என இரண்டிலும் கிடைக்கின்ற டிரையல்ஸ் மாடலில் கிளாசிக் மற்றும் புல்லட்டில் பயன்படுத்த என்ஜின் பொருத்தப்படடுள்ளது.  19.8 bhp பவர் , 28 Nm டார்க் வழங்கவல்ல 346 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. புல்லட் 500 டரையல்ஸ் மாடலில் , தற்போது விற்பனையில் உள்ள 27.2 bhp பவர் , 41.3 Nm டார்க் வழங்கவல்ல 499 சிசி எஃப்ஐ என்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சாதாரண மாடலை விட குறைந்த நீளத்தை கொண்ட ஃபென்டர், ஹெட்லைட் கிரில், ஒற்றை இருக்கை, பெற்றதாகவும், முன்புற 19 அங்குல ஸ்போக்கு வீல் உடன் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற 18 அங்குல ஸ்போக்கு வீல் உடன் 240 மிமீ டிஸ்க் பிரேக் உடன் பாதுகாப்பு சார்ந்த  டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக வந்துள்ளது.

டீலர்களைப் பொறுத்தவரை, புல்லட் ட்ரையல்ஸ் மாடல்களை அடிப்படையாகக் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் குறைவானவர்கள் மட்டும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ரூ.1.67 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 350, மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் டிரையல்ஸ் 500 பைக் விலை ரூ.2.07 லட்சத்தில் கிடைக்கின்றது.

உதவி – bikewale

Exit mobile version