ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிளுக்கு அலாய் வீல் ஆப்ஷன்

 ராயல் என்ஃபீல்டு

உலகின் மிகப்பெரிய நடுத்தர மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு, முதன்முறையாக கிளாசிக் வரிசை மற்றும் தண்டர்பேர்டு மாடல்களுக்கு அலாய் வீல் தேர்வினை கூடுதல் துனைக்கருவியாக அதிகார்ப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

118 ஆண்டுகால ராயல் என்ஃபீல்டு வராலாற்றில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக அலாய் வீல் ஆப்ஷனை ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு எக்ஸ் வரிசையில் நிரந்தர அம்சமாக அறிவித்தது. ஆனால் மற்ற மாடல்களுக்கு அலாய் வீல் வெளியிடப்படாது என குறிப்பிட்டிருந்த நிலையில், கூடுதல் ஆக்செரீஸ்களாக  முதன்முறையாக கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 மாடல்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் டெலிவரி பெறும்போது சாதாரண ஸ்போக் வீல் மட்டும் வழங்கப்பட உள்ளது.

கிளாசிக் அலாய் வீல்

தண்டர்பேர்டு எக்ஸ் வரிசையில் இடம்பெற்ற 90/90-19 முன் டயர் மற்றும் 120/80-18 பின் டயர் அளவுகளிலே கிளாசிக் மாடலுக்கும் அலாய் வீல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட வகையில் பல்வேறு நிற மாறுதல்களை பெற்றுள்ளது. கிளாசிக் வரிசை மட்டுமல்லாமல் தண்டர்பேர்டு வரிசை மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

9 ஸ்போக்குகளை கொண்ட மெஷின் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் மாடல்களுக்கு 2 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.

முன்பாக 650 ட்வீன்ஸ் மாடலுக்கும் அலாய் வீல் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை விற்பனைக்கு வெளியாகத நிலையில் அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் அலாய் வீல் விலை வரி உட்பட ரூபாய் 11,000 என விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது.

Exit mobile version