Automobile Tamilan

பிஎஸ்4 மாடல்களை விற்று தீர்த்த ராயல் என்ஃபீல்டு

a054a royal enfield classic 350 bs6

மார்ச் 21 ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து ராயல் என்ஃபீல்டு டீலர்களிடமும் பிஎஸ்6 பைக்குகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிஎஸ்4 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் முதன்முனையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் உட்பட முன்னணி தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பிஎஸ்4 வாகனங்களை கையிருப்பில் வைத்துள்ள நிலையில், நாட்டில் பிஎஸ்4 வாகனங்களை முழுமையாக விற்பனை செய்த முதல் இரு சக்கர வாகன தயாரிப்பாளராக ராயல் என்ஃபீல்டு விளங்குகின்றது.

தற்போது இந்நிறுவனம், பிஎஸ்6 கிளாசிக் 350, புல்லட் 350, ஹிமாலயன், கான்டினென்டினல் ஜிடி மற்றும் இன்டர்செப்டார் போன்ற மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஆனால் தண்டர்பேர்டு மாடல் ஏப்ரல் மாதம் மீட்டியோர் என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும், இந்நிறுவனம் 500சிசி மாடல்களை சந்தையிலிருந்து முற்றிலும் நீக்கியுள்ளது.

Exit mobile version