• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 750 அறிமுகம் எப்பொழுது ?

by MR.Durai
3 July 2023, 8:03 am
in Bike News
0
ShareTweetSend

royal enfield logo

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், அடுத்த புதிய 750cc என்ஜின் பிளாட்ஃபாரத்தை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளது. தற்பொழுது 350cc, 411cc, 650cc என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன் பெற்ற மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அடுத்து, 450cc அல்லது 500cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற மாடல்களை அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், கூடுதலாக புதிய 750cc பிளாட்ஃபாரத்தில் என்ஜினை உருவாக்கவும், இதில் முதல் மாடலாக பாபர் ஸ்டைல் ஷாட்கன் 750 விற்பனைக்கு வரவுள்ளது.

Royal Enfield 750cc Engine

ஆரம்ப கட்ட தயாரிப்பு பணியில் உள்ள புதிய 750சிசி என்ஜின் பெற்ற மாடலில் முதல் பைக் பாபர் ஸ்டைல் பெற்றதை  R2G என்ற குறியீடு பெயரில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உட்பட பல்வேறு சந்தைகளில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இங்கிலாத்தில் உள்ள லீசெஸ்டர் ஆர்இ தொழில்நுட்ப மையத்தில் தயாரிப்பு பணிகள் நடக்கிறது, மேலும் இது பல தசாப்தங்களாக ராயல் என்ஃபீல்டின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிளாக இருக்க வாய்ப்புள்ளது மற்றும் அதன் தயாரிப்பு வரிசைகளில் மேலாக அமர்ந்திருக்கும்.

350, 450, 650 மற்றும் 750 என ஒவ்வொரு என்ஜின் பிரிவிலும்  பல தயாரிப்பு மாடல்கள் வெளிவருவதே திட்டம் என கூறுகின்றன. பட்டியலில் முதலாவதாக பாபர் 750 இருந்தாலும், இன்னும் பல மாடல்கள் குறிப்பாக ரோட்ஸ்டெர் ஹண்டர் 750, அட்வென்ச்சர் ஹிமாலயன் 750, கிளாசிக் 750 மற்றும் சூப்பர் மீட்டியோர் 750 ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

750cc என்ஜின் பெற்ற முதல் மாடல் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய 450cc என்ஜின் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விற்பனைக்கு வரக்கூடும்.

2025 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

source

Tags: Royal Enfield ShotGun 750
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version