Automobile Tamilan

கொரில்லா 450-ன் வேரியண்ட் வாரியான வசதிகள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செர்பா 452 இன்ஜின் பெற்ற கொரில்லா 450 பைக்கில் மூன்று விதமான வேரியண்டுகள் ஆனது கிடைக்கின்றது. Analogue, Dash, Flash என மூன்று விதமான வேரியண்டுகளில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் எந்த வேரியண்டை தேர்ந்தெடுக்கலாம் போன்ற முக்கிய விபரங்களை தற்போது இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

royal-enfield-guerrilla-450-variants-explained

Guerrilla 450 Analogue

துவக்க நிலை Analog கொரில்லா 450 விலை ரூ.2.39 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த மாடலில் பிளேயா கருப்பு, ஸ்மோக் சில்வர் என இரு நிறங்களைப் பெற்று ஹண்டர் 350 மற்றும் மற்றும் சூப்பர் மீட்டியோ 650 போன்ற பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்ற செமிய அனலாக் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் அதன் அருகே இணைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் நேவிகேஷனுக்கான டிரிப்பர் நேவிகேஷன் பாட் பெற்றிருக்கின்றது

Guerrilla 450 Dash

ரூபாய் இரண்டு 2.49 லட்சம் விலையில் துவங்குகின்ற கொரில்லா 450 Dash மாடலில் பிளேயா கருப்பு, கோல்ட் டிப் என நிறத்தை என இரு நிறங்களைப் பெற்று ஏற்கனவே ஹிமாலயன் 450 பைக்கில் இடம் பெற்று இருக்கின்ற நான்கு அங்குல டிஎஃப்டி கிளஸ்டர் கொடுக்கப்பட்டிருக்கின்றது இதில் பல்வேறு கனெக்டிவிட்டி வசதிகள் மற்றும் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் மற்றும் இசைக்கட்டுப்பாடு, ஆவணங்களை சேமிக்கும் வகையில் வரான வசதிகளை வழங்குகின்றது.

Guerrilla 450 Flash

Dash வேரியண்டின் வசதிகளில் மாற்றமில்லாமல் அனைத்து வசதிகளும் பெற்றுள்ள ரூ.2.54 லட்சத்தில் Flash வேரியண்டில் மிகவும் கவர்ச்சிகரமான மஞ்சள் ரிப்பன் மற்றும் ப்ரெவோ ப்ளூ என இரண்டு வண்ணங்கள் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக்கின் ஆன்ரோடு விலை ரூபாய் 2.90 லட்சம் முதல் ரூபாய் 3.07 லட்சம் வரை அமைந்துள்ளது.

 

Exit mobile version