Automobile Tamilan

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

Royal Enfield Himalayan 450 Mana Black

ராயல் என்ஃபீல்டின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலான ஹிமாலயன் 450 அடிப்படையில், சிறப்பு மானா பிளாக் எடிசனை EICMA 2025ல் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கிடைக்க உள்ளது.

உலகின் மிகக் கடினமான மற்றும் உயரமான சாலைகளில் ஒன்றான Mana Pass (18,478 அடி உயரம்) மீது ஈரக்கப்பட்டு அதன் அடிப்படையிலான பிரத்தியேக எடிசனில் பல்வேறு நிறுவனம் சார்ந்த ஆக்செரீஸ் மற்றும் வசதிகளை பெற்றுள்ளது.

RE Himalayan Mana Black Edition

நீண்ட பயணத்திற்கும் கடினமான பாதைகளுக்கும் ஏற்றதாகவும் ஆஃப் ரோடு சாலைகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450ல் செர்பா என்ஜின் ஆனது பொருத்தப்பட்டுள்ளது.

பிளாக் எடிஷன், பாகங்கள் மற்றும் பாடி பேனல்கள் முழுவதும் என அனைத்திலும் முழு கருப்பு வண்ணத்தில் வருகிறது, அதே நேரத்தில் எரிபொருள் டேங்க் நுட்பமான சாம்பல் நிற கிராபிக்ஸுடன் மாறுபாட்டின் சேர்க்கிறது.

அட்வென்ச்சர் சார்ந்த ஆக்செரீஸ் கருப்பு நிற ரேலி ஹேண்ட் கார்ட்ஸ்,  ரேலி மட்கார்டு பயன்பாட்டிற்காக, நீண்ட பயணத்திற்காக ஒற்றை ரேலி இருக்கை, பஞ்சரை எதிர்கொள்ள ட்யூப்லெஸ் ஸ்போக்டூ வீல் உள்ளது.

452cc என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version