Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 விற்பனைக்கு எப்பொழுது.!

Royal Enfield himalayan 750 and him e

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஹிமாலயன் 750 அட்வென்ச்சர் மற்றும் எலக்ட்ரிக் HIM-E என இரண்டையும் லடாக்கில் சாலை சோதனை செய்து வரும் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

வழக்கமான பாரம்பரிய ராயல் என்ஃபீல்டின் டிசைன் வடிவத்தை பின்பற்றிய வட்ட வடிவ எல்இடி விளக்குடன் சந்தையில் உள்ள ஹிமாலயன் 450 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாடல், அனேகமாக புதிய 750சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, 650சிசி எஞ்சின் பரிவில் ரெட்ரோ மாடல்கள் கிடைக்கின்ற நிலையில், கூடுதலாக வரவுள்ள புதிய மாடல் சக்திவாய்ந்த 750சிசி எஞ்சினை பெற்று அதிகபட்சமாக 55hp வரை பவர் வெளிப்படுத்தலாம்.

முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று இரட்டை டிஸ்க் பிரேக் கொண்டு பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் மோடுகளை பெற்றிருக்கலாம். உயரமான விண்ட்ஸ்கீரினுடன் மேல் நோக்கி கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்ஹாஸ்ட் அமைந்துள்ளது.

தற்பொழுது சந்தையில் உள்ள மாடலின் TFT கிளஸ்ட்டரை கொடுத்து பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றுள்ளது. விற்பனைக்கு அனேகமாக 2025 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2026 துவக்க மாதங்களில் சந்தையில் ரூ.4.50 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

RE HIM-E electric

முன்பாக EICMAவில் காட்சிப்படுத்தப்பட்ட சோதனை ஓட்ட டெஸ்டிங் மாடலுக்கான HIM-E எலக்ட்ரிக் வெர்ஷனும் கூடுதலாக இந்த மாடலுடன் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த மாடல் உற்பத்திக்கு செல்ல வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் சோதனை செய்யப்படுகின்ற பேட்டரி, மோட்டார் மற்றும் பாகங்களை இந்நிறுவனத்தின் ஃபிளையிங் ஃபிளே எலக்டரிக் பிராண்டின் கீழ் வரவுள்ள C6, S6 போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Exit mobile version