Automobile Tamil

சல்யூட்டோ உட்பட 6 பைக்குகளை விடுவித்த இந்தியா யமஹா மோட்டார்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், பிஎஸ்6 முறைக்கு மாற்றாமல் சல்யூட்டோ, ஆர்3 , SZ-RR V2.0, FZ25, போன்றவற்றை நீக்கியுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஸ்கூட்டர் வரிசையில் ஆல்பா மாடலை நீக்கியுள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளை பின்பற்றி உற்பத்தி செய்யப்படாத என்ஜின்களை பெற்ற மாடல்களான சல்யூட்டோ ஆர்எக்ஸ், சல்யூட்டோ 125, SZ-RR V2.0, FZ25, ஃபேஸர் 25 மற்றும் ஆர்3 போன்ற பைக்குகள் இந்திய சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

110 – 125 சிசி வரையில் உள்ள பிரிவுகளில் இருந்து பைக்குகளை முற்றிலும் நீக்கியுள்ளதால், இனி யமஹா பைக்குகள் 150 சிசி முதல் துவங்க உள்ளன. அதே நேரத்தில் யமஹா ஸ்கூட்டர் பிரிவில் 125சிசி-க்கு கூடுதலான என்ஜின் பெற்றதை மட்டும் விற்பனை செய்யும். 110சிசி ஸ்கூட்டர் சந்தையிலிருந்து வெளியேறியுள்ளது.

குறிப்பாக 250சிசி சந்தையில் விற்பனை செய்யப்பட்ட FZ25 மற்றும் ஃபேஸர் 25 என இரு மாடல்களும் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்படவில்லை. ஆனால் இந்த மாடல் சற்று தாமதமாக இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு மீண்டும் வரக்கூடும்.

மேலும், இந்தியாவில் யமஹா நிறுவனம் 100 பிரத்தியேக ப்ளூ ஸ்குயர் டீலர்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக பல்வேறு பிரீமியம் பைக்குகளை களமிறக்க வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version