மிக நீண்ட காத்திருப்புக்கு பின்னர் சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மே 23, 2023 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் ரேஞ்சு அதிகபட்சமாக 300 கிமீ வரை வழங்கும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக விலை அறிவிக்கப்பட்ட சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் விற்பனை துவங்கப்படவில்லை. இறுதியாக தற்பொழுது வரவிருக்கும் புதிய மாடல் சிறப்பான ரேஞ்சு மற்றும் விலை கூடுதலாக அமைந்திருக்கலாம்.
கடந்த 24 மாதங்களுக்கு மேலாக சிம்பிள் எனெர்ஜி ஒன் மின்சார ஸ்கூட்டரை தீவிரமான சூழ்நிலையில் சோதனைக்கு உட்படுத்தி வந்ததாக கூறுகிறது. புதிய வாகனத் தொழில்துறை தரநிலைகள் (AIS) 156 மசதோ 3 உடன் இணங்கும் முதல் OEM தயாரிப்பாளர் என EV பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
8.5 kW மின்சார மோட்டார் அதிகபட்சமாக 11 bhp பவர் மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது.
குறைந்த விலையில் வரவுள்ள 4.8 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கிமீ வரை ரேஞ்சு வழங்கும். அடுத்து ஸ்வாப்பிங் பேட்டரி பேக் கொண்டுள்ள வேரியண்ட் அதிகபட்சமாக 300 கிமீ வரை வழங்கும்.
மற்ற அம்சங்கள் 7 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு, நேவிகேஷன், ரைடிங் முறைகள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவ் அம்சங்களை உள்ளடக்கியது. நீளம், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களில் கிடைக்கும்.