இந்தியாவில் சுசுகி ஹயபுஸா சூப்பர் பைக் நீக்கப்பட்டது

hay

இந்தியாவின் பிரபலமான சூப்பர் பைக் மாடலாக விளங்குகின்ற சுசுகி நிறுவனத்தின் ஹயபுஸா பைக் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்படாத காரணத்தால் நமது நாட்டிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ப மாற்றப்படாத வாகனங்களின் விற்பனை நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் பிஎஸ்4 முறையில் கிடைத்து வந்த ஹயபுஸா இந்தியாவில் கடந்த டிசம்பர் 2019-ல் வெளியிடப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மாடலில் 1340 சிசி பெற்ற என்ஜின் அதிகபட்சமாக  199.7 hp பவர் மற்றும் 155 Nm டார்க் பெற்று விளங்குகின்றது.

இந்தியாவை பொருத்தவரை சூப்பர் பைக் மாடல் வந்து CKD முறையில் தயாரிக்கப்பட்டது. அதாவது பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் ஒருங்கிணைத்து இந்நிறுவனம் செய்து வந்தது.

சுசுகி ஹயபுஸா பைக் விலை ரூ. 13.75 லட்சம் விற்பனைக்கு கிடைத்து வந்தது. இந்நிலையில் அடுத்த தலைமுறை ஹயபுஸா இந்தியாவில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

Exit mobile version