Automobile Tamilan

புதிய நிறத்தில் சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுகமானது

 

50994 burgman street matte black

மேக்ஸி ஸ்கூட்டர் ரக 125சிசி என்ஜின் பெற்ற சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரில் புதிதாக மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக கிடைத்து வரும் மூன்று நிறங்களுடன் கூடுதலான நிறம் இணைக்கப்பட்டிருந்தாலும் விலை உயர்த்தப்படவில்லை.

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக பர்க்மேன் ஸ்டீரிட் மாடல் மாதந்தோறும் சராசரியாக 6,000 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றது. இந்நிலையில் மொத்தமாக 90,000 க்கு அதிமான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் (Suzuki Eco Performance) கூடிய 8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm  இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கின்றது. முன்புற டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் எனப்படும் பாதுகாப்பு சார்ந்த பிரேக்கிங் அமைப்பினை கொண்டதாக விளங்குகின்றது.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்கின்றது.

சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் விலை ரூ. 72,912 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

Exit mobile version