புதிய சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் அறிமுகம் விபரம்

gixxer 250

அடுத்த சில மாதங்களுக்குள் நேக்டு ஸ்டைல் சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் விற்பனைக்கு வெளியிட சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஃபேரிங் ரக ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் ரூ.1.70 லட்சம் விலையில் வெளியாகியுள்ளது.

முந்தைய ஜிக்ஸர் 150 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலும் விற்பனைக்கு வரக்கூடும் இரு மாடல்களும் ஒரே மாதரியான ஸ்டைல் அம்சத்தை கொண்டதாக அமைந்திருக்கும்.

சுஸூகி ஜிக்ஸெர் 250

சுசுகி நிறுவனத்தின் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்துடன் புதிதாக வரவுள்ள இந்த மாடல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற  GSX-S125 பின்னணியாக கொண்டதாக அமைந்திருக்கும். சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்றதாக 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக் மைலேஜ் லிட்டருக்கு 38.5 கிமீ ஆக இருக்க வாய்ப்புள்ளது. எல்இடி ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக அமைந்துள்ளது.

யமஹா FZ25 மாடலுக்கு போட்டியாக வெளி வரவுள்ள சுஸூகி ஜிக்ஸெர் 250 பைக்கின் விலை ரூ. 1.60 – ரூ.1.65 லட்சத்துக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version