70 லட்சம் இருசக்கர வாகனங்களை தயாரித்த சுசூகி மோட்டார்சைக்கிள்

சுசூகி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு சுசூகி மோட்டார்சைக்கிள் 2006 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உற்பத்தியை துவங்கியது. 7 மில்லியன் எண்ணிக்கையை கடந்த மாடலாக சுசூகி V-Strom SX மஞ்சள் நிறத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

குருகிராம் பகுதியில் அமைந்துள்ள கெர்கி தௌலா ஆலையில் அதன் 7 மில்லியன் யூனிட் மாடலை உற்பத்தி செய்துள்ளது. 7 மில்லியன் யூனிட் மஞ்சள் நிறத்தில் சுசுகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் ஆகும்.

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் சாதனை பற்றி இந்நிகழ்ச்சியில் பேசிய சுசூக்கி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கெனிச்சி உமேடா, “மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில், நாங்கள் 9.38 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளோம். 2021-’22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டு வளர்ச்சி 24.3 சதவீதம் என குறிப்பிட்டள்ளார்.

V-Strom SX, ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF, ஜிக்ஸர், அக்செஸ் 125, அவெனிஸ் 125, பர்க்மேன் ஸ்டீரிட்  மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் EX ஆகியவற்றுடன் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்கள் V-Strom 650XT, கட்டானா மற்றும் ஹயபுசா ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

Exit mobile version