Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் கிளஸ்ட்டர் படம் கசிந்தது

new re 450 bike spotted

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் புதிய 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. இந்த மாடல் தொடர் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

450cc என்ஜின் கொண்ட மாடல்களில் ரோட்ஸ்டெர் ஹண்டர் 450 பைக்கின் சோதனை ஓட்ட படங்களும் வெளியாகியிருந்தது.

Royal Enfield Himalayan 450

சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாடல், டிஜிட்டல் டேகோமீட்டர் அலகினை வெளிப்புற சுற்றளவை கொண்டு கியர்-பொசிஷன் இன்டிகேட்டர் மையத்தில் அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கியர் இண்டிகேட்டரின் வலதுபுறத்திலும் மற்றும் எண்கள் மிகப் பெரிய எழுத்துருவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

புதிய  லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000-9,000rpm டேக்கோமீட்டரை பெற்று டிரிப்பர் நேவிகேஷன் அமைப்பு தனியாக வழங்கப்பட்டிருக்கலாம். முழுமையாக எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயிலைட், எல்இடி இண்டிகேட்டரை பெற்றிருக்கும்.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 இப்போது அதன் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளதால் ஆண்டின் இறுதியில் ரூ.2.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version