விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023

2023 ather

2023-Honda-Activa-blue-color-pic-1

கடந்த பிப்ரவரி 2023 மாதந்திர விற்பனையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான மாடல் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐக்யூப் மற்றும் 450x போன்ற ஸ்கூட்டர்கள் உள்ளன. சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் 7214 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – பிப்ரவரி 2023

டாப் 10  பிப்ரவரி  2023 பிப்ரவரி 2022
1. ஹோண்டா ஆக்டிவா 1,74,503 1,45,317
2. டிவிஎஸ் ஜூபிடர் 53,891 47,092
3. சுசூகி ஆக்செஸ் 40,194 37,512
4. ஓலா 17,694 3,910
5. டிவிஎஸ் என்டார்க் ,17,124 23,061
6. டிவிஎஸ் ஐக்யூப் 15,522 2,238
7. ஹோண்டா டியோ 14,489 15,487
8. ஏதெர் 450X 12,147 2,178
9. ஹீரோ டெஸ்ட்னி 8,232 674
10. ஹீரோ ஜூம் 7,214

டாப் 10 ஸ்கூட்டர்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் உள்ளிட்ட மாடல்களுடன் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் போன்ற மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகின்றது.

 

Exit mobile version