இந்திய சந்தையில் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் அதிகம் விற்பனை ஆகி டாப் 10 இடங்களை கைப்பற்றியுள்ள சிறந்த பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிந்து கொள்ளலாம்.
இருசக்கர வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனமும் அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. முதல் 10 இடங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கின் 2022-2023 ஆம் நிதி வருடத்தில் விற்பனை எண்ணிக்கை 32,55,744 பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை காட்டிலும் 22.15 சதவீத (26,65,386) வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இரண்டாம் இடத்தில் ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 21,49,658 பதிவு செய்துள்ளது . கடந்த 2021-2022 நிதி ஆண்டை காட்டிலும் 25.84 சதவீத வளர்ச்சி (17,08,305) அடைந்துள்ளது.
டாப் 10 | FY 2023 | FY 2022 |
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 32,55,744 | 26,65,386 |
2. ஹோண்டா ஆக்டிவா | 21,49,658 | 17,08,305 |
3. ஹோண்டா CB ஷைன் | 12,09,025 | 11,01,684 |
4. ஹீரோ HF டீலக்ஸ் | 10,52,034 | 11,65,163 |
5. பஜாஜ் பல்சர் | 10,29,057 | 7,77,044 |
6. டிவிஎஸ் ஜூபிடர் | 7,29,546 | 5,04,567 |
7. பஜாஜ் பிளாட்டினா | 5,34,017 | 5,75,847 |
8. சுசூகி அக்செஸ் | 4,98,844 | 4,60,596 |
9. டிவிஎஸ் XL100 | 4,41,567 | 4,73,150 |
10. டிவிஎஸ் அப்பாச்சி | 3,49,082 | 3,25,598 |
டாப் 10 இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் ஜூபிடர் அதிகபட்ச வளர்ச்சியாக 44.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 7,29,546 யூனிட்டுகளை 2023 ஆம் நிதியாண்டில் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 5,04,567 யூனிட்டுகளை விற்றது.
அடுத்து, பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக் விற்பனை 32.43 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. மிக மோசமான வளர்ச்சி பெற்ற மாடல்களில் பிரபலமான டிவிஎஸ் XL 100 உள்ளது.