டாப் 5 பைக் தயாரிப்பாளர்கள் பிப்ரவரி 2023

Hero-Splendor-Plus-XTEC

கடந்த பிபரவரி 2023 மாதந்திர விற்பனை அறிக்கையின் படி அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ள நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் முதன்மையான இடத்தில் உள்ளது. ஹீரோ மொத்தமாக 3,90,673 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

1. ஹீரோ மோட்டோகார்ப்

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிப்ரவரி மாதம் மொத்தமாக 3,90,673 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த பிப்ரவரி 2022 மாதத்துடன் ஒப்பீடுகையில் 42,000 யூனிட்டுகளை குறைவாக விற்பனை செய்துள்ளது. நாட்டின் மொத்த இரு சக்கர வாகன சந்தையில் 30.83 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது.

2. ஹோண்டா டூ வீலர்ஸ்

ஹோண்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி 2022 (2,46,784) ஆம் ஆண்டை விட 58,000 யூனிட்டுகளை கூடுதலாக விற்பனை செய்துள்ளது. பிபரவரி 2023 மாதந்திர விற்பனை முடிவில் 3,02,184 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

3. டிவிஎஸ் மோட்டார்

நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முந்தைய 2022 (1,70,179)ஆம் ஆண்டினை காட்டிலும் 24 சதவீத கூடுதலான வளர்ச்சி பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 2023 முடிவில் 2,11,337 யூனிட்டுகளை டெலிவரி செய்துள்ளது.

4. பஜாஜ் ஆட்டோ

இரு சக்கர வாகன சந்தை மதிப்பில் வீழ்ச்சி இருந்தபோதிலும், பஜாஜ் ஆட்டோ 2023 பிப்ரவரியில் 1,38,426 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2022 பிப்ரவரி இதே மாதத்தை விட கிட்டத்தட்ட 10,000 யூனிட்கள் அதிகமாகும்.

5. ராயல் என்ஃபீல்டு

உலகின் மிகப்பெரிய நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையின் முதன்மையான தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் 2023 பிப்ரவரியில் 64,195 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 46,413 யூனிட்களாக இருந்தது.

Exit mobile version