Automobile Tamilan

ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக் அறிமுகமானது

Triumph Speed ​​400 bike debuts

ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் பஜாஜ் ஆட்டோ கூட்டணியில் ஸ்பீடு 400 பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள பைக்கில் 398.15 cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்பீடு 400 பைக்கில் சிவப்பு உடன் கருப்பு, நீள நிறத்துடன் கிரே மற்றும் கருப்பு நிறத்துடன் கிரே என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

Triumph Speed 400

பஜாஜ் மற்றும் ட்ரையம்ப் இணைந்து தயாரித்துள்ள புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக் மாடலில் போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம் மற்றும் காஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்முடன் இணைந்து புதிய டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு சிறப்பான மற்றும் நிலைப்பினை ஏற்படுத்தும் கையாளுதலுக்கான உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.  790 மிமீ இருக்கை உயரத்துடன், ஸ்பீட் 400 பைக்கின் எடை 170 கிலோ கிராம் ஆக உள்ளது.

43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது.  பின்பக்கத்தில்130மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரேக்கிங் பொறுத்தவரை, ட்ரையம்ப் ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

ஸ்பீட் 400 பைக்கின் இரண்டு முனைகளிலும் 17-இன்ச் டயர் பொருத்தப்பட்டு பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டியான மெட்ஸெலர் ஸ்போர்ட்டெக் M9RR டயரை பெற்றுள்ளது.

ஸ்பீட் 400 பைக்கில் ரைடு-பை-வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கியர் மற்றும் ஃப்யூல் கேஜிற்கான வசதி செயல்பாட்டு மற்றும் படிக்க எளிதாக இருக்க வேண்டும். அனைத்தும் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் விலை அறிவிக்கப்படலாம். இந்திய சந்தையில் இந்த மாடலுக்கு போட்டியாக ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு 350 மற்றும் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு 450 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

2023 ட்ரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் விலை ரூ. 3.00 லட்சத்திற்குள் துவங்கலாம்.

Exit mobile version