Automobile Tamilan

டிரையம்ப் ஸ்பீடு 400 ஆன்-ரோடு விலை தமிழ்நாடு வெளியானது

Triumph speed 400 on-road price

பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியின் முதல் ஸ்பீடு 400 பைக்கின் சென்னையின் ஆன்-ரோடு விலை வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்ளில் டிரையம்பின் குறைந்த விலை ரோட்ஸ்டெரின் ஆன்-ரோடு விலை தொடர்பாக பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆன்-ரோடு விலை குறித்து டிரையம்ப் வெளியிட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்ட நிலையில், டிரையம்பின் டீலர்கள் வெளியிட்டுள்ள ஸ்பீடு 400 ஆன்-ரோடு விலை இந்தியாவில் ரூ.2.67 லட்சம் முதல் ரூ. 3.10 லட்சம் வரை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, கர்நாடாக போன்ற ஒரு சில மாநிலங்களில் சாலை வரி அதிகமாக உள்ளது.

Triumph Speed 400 on-Road Price

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹண்டர் 350, ஹார்லி எக்ஸ் 440, ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350,  உள்ளிட்ட பல்வேறு மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 30 Kmpl வழங்கும்.

176 கிலோ எடை கொண்ட 43 மிமீ அப்சைடு டவுன் முன் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டு 140 மிமீ பயணத்தை வழங்குகிறது.  பின்பக்கத்தில்130 மிமீ பயணக்கின்ற மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் அட்ஜஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பிரேக்கிங் பொறுத்தவரை, ட்ரையம்ப் ஸ்பீட் 400 நான்கு பிஸ்டன் ரேடியல் காலிபர் பொருத்தப்பட்டுள்ளது, முன்பக்கத்தில் 300 mm நிலையான டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 mm டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. ஸ்பீட் 400 பைக்கின் இரண்டு முனைகளிலும் 17 இன்ச் டயர் பொருத்தப்பட்டு டயரை பெற்றுள்ளது.

டிரையம்ப் ஸ்பீடு விலை ₹. 2.33 லட்சம் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.10,000 குறைவாக ₹ 2.23 லட்சத்தில் கிடைக்கும்.

Triumph Speed 400 on-road Price in Chennai

TRIUMPH SPEED 400 ON-ROAD PRICES
Cities Price
Chennai Rs 2,77,619
Delhi Rs 2,67,927
Bengaluru Rs 3,05,869
Goa Rs 2,86,669
Hyderabad Rs 2,87,074
Mumbai Rs 2,87,247
Exit mobile version