2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக் விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம், கூடுதலாக 5 புதிய நிறங்களை பெற்ற 2018 டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் ரூ. 95,685 ஆரம்ப விலை தொடங்கி கார்புரேட்டர், எஃப்ஐ மற்றும் ஏபிஎஸ் போன்ற தேர்வுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி எடிசனின் அப்பாச்சி ரேஸ் எடிசன் மாடலை தொடர்ந்து, தற்போது மேட் பிளாக், வெள்ளை, கிரே. ஆகிய மூன்று நிறங்களில் சிவப்பு நிற கிராபிக்ஸ் ஸ்டிக்கரை பெற்று சிவப்பு நிற மாடலில் கருப்பு கிராபிக்ஸை பெற்றுள்ளது.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.

புதிய பைக்கில் A-RT (Anti-Reverse Torque) சிலிப்பர் கிளட்ச் நுட்பத்துடன் கூடிய ஃபிளைஸ்க்ரின் பெற்று சிறப்பான முறையில் ஏரோடைனமிக்ஸ் பெற்றதாக விளங்குகின்றது. வாகனத்தின் நிலைப்பு தன்மை, பெர்ஃபாமென்ஸ், இலகுவாக கியர்களை மாற்றுவதற்கு ஏற்ற வகையிலான அம்சத்தை வழங்கும் திறன் பெற்றதாக ஆன்டி ரிவர்ஸ் டார்க் சிலிப்பர் கிளட்ச் நுட்பத்தை பெற்று விளங்குகின்றது.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மாடல் சந்தையில் உள்ள பல்ஸர் 200 NS , டியூக் 200, வரவுள்ள எக்ஸ்ட்ரீம் 200R ஆகிய மாடல்களை எதிர்கொள்ளுகின்றது. முந்தைய மாடலை விட ரூ. 2,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.