Automobile Tamilan

டிவிஎஸ் ஐக்யூப் செலிபிரேஷன் எடிசன் விற்பனைக்கு வெளியானது

TVS iqube Celebration Edition

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 78 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஐக்யூப் செலிப்ரேஷன் எடிசனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஐக்யூப் S மற்றும் ஐக்யூப் 3.4kwh என இரண்டிலும் மொத்தமாக 2000 யூனிட்டுகள் மட்டும் விற்பனைக்கு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.

சிறப்பு டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 26 முதல் டெலிவரி தொடங்கும்.

iqube ஸ்கூட்டரின் குறிப்பிட்ட பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் கருப்பு ஆகிய இரட்டை-தொனி வண்ணத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக #CelebrationEdition பேட்ஜ் உள்ளது.

3.4kWh பெறுகின்ற இந்த இரு வேரியண்டிலும் அதிகப்பட்சமாக 4.4kW பவர் மற்றும் 140Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முழுமையாக பேட்டரி சார்ஜ் செய்யும்போது அதிகப்படியான ரேஞ்ச் 100 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூப் S – ₹ 1,47,155

ஐக்யூப் 3.4kwh – ₹ 1,37,363

(Ex-showroom Tamil Nadu)

3,50,000 க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இந்த சிறப்பு எடிசன் டிசன் ஆனது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு டெலிவரி வழங்கப்பட உள்ளது

Exit mobile version