Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
tvs iqube electric : 75 கிமீ ரேஞ்சு.., டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் முழுவிபரம் | Automobile Tamilan

tvs iqube electric : 75 கிமீ ரேஞ்சு.., டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்றும் முழுவிபரம்

tvs iqube electric

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் ஐக்யூப் எலெக்ட்ரிக் (iQube Electric) ஸ்கூட்டரை ரூ. 1.15 லட்சம் விலையில் விற்பனைக்குஅறிமுகம் செய்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முதன்முறையாக 2008 ஆம் ஆண்டில் ஸ்கூட்டி டீன்ஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை 40 கிமீ வேகத்தில் 40 கிமீ பயணிக்கும் திறனுடன் விற்பனைக்கு வெளியிட்டிருந்தது. தற்போது மீண்டும் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் புதிய மாடலை கொண்டு களமிறங்கியுள்ளது.

தற்போது வந்துள்ள புதிய ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.4 கிலோ வாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு மணிக்கு அதிகபட்சமாக 78 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன், 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 4.2 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். நீக்க இயலாத வகையிலான பேட்டரி ஐ க்யூப் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உட்பட பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள் வழங்குகின்ற டிவிஎஸ் நிறுவன SmartXonnect அம்சங்களை பெற்றிருக்கும்.

வெள்ளை நிறத்தில் வந்துள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், ஒளிரும் வகையிலான டிவிஎஸ் லோகோ இடம்பெற்றுள்ளது.

முதற்கட்டமாக பெங்களூரூ நகரில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டர் அடுத்த சில நாட்களில் 100 யூனிட்டுகள் டெலிவரி வழங்கப்படுவதுடன் மாதம் 1000 யூனிட்டுகள் வரை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.15 லட்சம் (ஆன்ரோடு பெங்களூரு)

இந்த ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு வீட்டிலும் இலகுவாக சார்ஜங் செய்வதற்கான வசதியை ஏற்படுத்துவதுடன், பொது இடங்களிலும் சார்ஜிங் நிலையங்களை ஏற்படுத்த உள்ளதாக டிவிஎஸ் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version