Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
bs6 tvs ntorq 125 price: பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் விலை, பவர் விபரம்

பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் விலை, பவர் விபரம்

b6f42 tvs ntorq125 bs6

டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனைக்கு வெளியிட்டுள்ள என்டார்க் 125 பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல் ரூபாய் 73,292 ஆரம்ப விலையில் வெளியாகியுள்ளது. எல்இடி ஹெட்லைட் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றுள்ளது.

மிகவும் பிரீமியமான அம்சங்களை பெற்ற என்டார்க் 125 பிஎஸ்6 முறைக்கு மாற்றப்படும் போது எந்த விதமான பவர் இழப்பீடும் இல்லாமல் தொடர்து 9.38 ஹெச்பி பவர் மற்றும் 10.5 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் டேங்க் 0.8 லிட்டர் வரை அளவு உயர்த்தப்பட்டு இப்போது 5.8 லிட்டர் கொண்டுள்ளது. அதே போல ஸ்கூட்டரின் எடை 1.9 கிலோ வரை உயர்த்தப்பட்டு 118 கிலோ கிராம் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஸ்கூட்டரின் நீளம் 4 மிமீ வரையும், 3 மிமீ வரை அகலமும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீல்பேஸில் எந்த மாற்றங்களும் இல்லை.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொண்டுள்ள இந்த மாடலில் 220 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் முன்புற டயரிலும், பின்புற டயரில் 130 மிமீ டிரம் பெற்று எஸ்பிடி சிஸ்டத்தினை கொண்டுள்ளது.

ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதி பெற்ற ஸ்மார்ட் எக்ஸ்கனெக்ட் மூலமாக நேவிகேஷன், இறுதியாக பார்க்கிங் செய்த இடம் உட்பட ரைடிங் ஸ்டேட்டஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பிஎஸ்6 டிவிஎஸ் என்டார்க் 125 விலை

என்டார்க் 125 – ரூ.73,292 (டிரம்)

என்டார்க் 125 – ரூ.77,292 (டிஸ்க்)

என்டார்க் 125 – ரூ.80,872 (டிஸ்க்)

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

Exit mobile version