• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விற்பனைக்கு அறிமுகமானது

by MR.Durai
19 September 2019, 2:42 pm
in Bike News
0
ShareTweetSend

TVS Ntorq 125 Race Edition

விற்பனையில் உள்ள என்டார்க் 125 ஸ்கூட்டரில் கூடுதல் ஸ்டைலிங் அம்சத்துடன் எல்இடி ஹெட்லைட் மற்றும் புதிய நிறம் பெற்ற டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் ரூபாய் 62,995 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண மாடலை விட ரேஸ் எடிஷன் விலை ரூ.3,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட் உடன் கூடிய T வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள், ரேசிங் கொடியின் செக் ஃபிளாக் பெற்ற பாடி கிராபிக்ஸ் மற்றபடி ஹசார்ட் லைட் , ஃபூட் போர்ட் சிவப்பு நிறம் மற்றும் ரேசிங் எடிஷன் லோகோ கொண்டிருக்கின்றது. மேலும், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை கலவையாக சேர்க்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பெற்ற ரேஸ் எடிஷன் மாடலில் தொடர்ந்து 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.

ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக கனெக்ட் செய்ய வல்ல டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் டிவிஎஸ் Smart Xconnect எனப்படும் நுட்பம் உள்ளது.  இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைடிங் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

டிவிஎஸ் ரேசிங் நிறுவனத்தின் 37 ஆண்டுகால பாரம்பரியத்தை பின்பற்றி டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் ரூ.62,995 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: TVS Ntorq 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version