டிவிஎஸ் மோட்டாரின் புதிய ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற என்டார்க் 150 ஸ்கூட்டரின் விலை ரூ.1,19,000 முதல் ரூ.1,29,000 வரை எக்ஸ்-ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 150சிசி ஏர-கூல்டு என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது.
என்டார்க் 125 ஸ்கூட்டரின் அடிப்படையில் என்ஜின் மற்றும் சேஸிஸ் உட்பட பெரும்பாலான மெக்கானிக்கல் சார்ந்த பாகங்களை பகிர்ந்து கொள்வதன் பிரேக்கிங் அமைப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
இன்ட்கிரேட்டேட் ஸ்டார்டர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள 149.7cc ஏர்-கூல்டு என்ஜின் பெற்று 13.2 hp @ 7000 rpm-லும் மற்றும் டார்க் 14.2 Nm @ 5500 rpm வெளிபடுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. கூடுதலாக 0.7Nm டார்க் வரை ISG வெளிப்பட்டுத்தும் உதவுகின்றது.
இந்த ஸ்கூட்டரில் ரேஸ் மற்றும் ஸ்டீரிட் என இரு ரைடிங் மோடு பெற்று 0-60Km/h வேகத்தை எட்ட 6.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதிகபட்ச வேகம் மணிக்கு 104 கிமீ ஆக உள்ளது.
115 கிலோ எடை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் காயில் ஸ்பிரிங் ஹைட்ராலிக் டேம்பர்ஸ் கொண்டுள்ளது.
மிகவும் அக்ரோஷமான தோற்றத்தை வெளிப்படுத்தும் நிலையில் 4 புராஜெக்ட்ர் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு 22 லிட்டர் ஸ்டோரேஜ், 12 அங்குல வீல் கொண்ட இந்த மாடலில் எல்சிடி அல்லது TFT என இரு கிளஸ்ட்டர் ஆப்ஷனை பெற்றுள்ளது.
மேலும், டாப் TFT வேரியண்டில் நைட்ரோ பச்சை, ரேசிங் சிவப்பு, மற்றும் டர்போ நீலம் கனெக்ட்டிவிட்டி சார்ந்த டிவிஎஸ் ஆப் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள் பெறுவதுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அலெக்ஸா இணைப்பு, ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, கிராஸ் அலர்ட் மற்றும் OTA சார்ந்த மேம்பாடுகளை பெற்றுள்ளது.
ரேசிங் சிவப்பு, ஸ்டீல்த் சில்வர் மற்றும் டர்போ நீலம் என மூன்று LCD கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.
- Ntorq 150 LCD – ₹ 1,19,000
- Ntorq 150 TFT – ₹ 1,29,000
(ex-showroom)
குறிப்பாக என்டார்க் 150க்கு போட்டியாக நேரடியான மாடலாக ஏப்ரிலியா SR 175, தவிர ஹீரோ ஜூம் 160 மற்றும் யமஹா ஏரோக்ஸ் 155 ஆகியவை லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்றதாக கிடைக்கின்றது.