டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் விற்பனைக்கு வந்தது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், கார்கில் வெற்றி தினத்தை நினைவுக்கூறும் வகையில், டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் மாடலை ரூ. 54,399 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

பிரத்தியேக கார்கில் எடிஷன் மாடலில் புதிதாக மூன்று நிறங்கள் மட்டும் இணைக்கப்பட்டு வேறு எவ்விதமான மாற்றங்களும் வழங்கப்படவில்லை. புதிதாக நாவெல் வெள்ளை, சோலிஜர் பச்சை மற்றும் ராயல் நீலம் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிவிஎஸ் மோட்டார் செயற்படுத்தி கார்கில் வெற்றி தினம் ஜூலை 26 ந் தேதி கொண்டாடுப்படுவதனை முன்னிட்டு Kargil Calling – Ride for the Real Stars என்ற பிராசாரத்தை 3500 டிவிஎஸ் டீலர்கள் வாயிலாக மேற்கொண்டது. இந்நிலையில் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் அடிப்படையில் கார்கில் சிறப்பு எடிஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்ற 109.7cc என்ஜின் அதிகபட்சமாக 8.4 bhp பவர் மற்றும் 8.7 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் எஸ்பிஎஸ் எனப்படுகிற Synchronised Braking System பெற்று முன்பக்க டயரில் 130 மிமீ மற்றும் பின்புற டயரில் 110 மிமீ டிரம் பிரேக்கினை இந்த பைக் பெற்றதாக சந்தையில் கிடைக்க உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து டிவிஎஸ் டீலர்களிடமும் கிடைக்க உள்ள சிறப்பு கார்கில் எடிசனில் ராணுவத்தில் பயன்படுத்துகின்ற நிறங்களை கொண்டதாக வந்துள்ளது. மற்றபடி எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் கார்கில் எடிஷன் பைக் மாடல் ரூ. 53,499 விற்பனையக டெல்லி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.