Automobile Tamilan

டிவிஎஸ் XL 100 மொபெட்டில் அலாய் வீலுடன் டீயூப்லெஸ் டயர் வெளியானது

new tvs xl 100 heavy duty alloy wheel

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற மொபெட் மாடலான எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டில் (XL100 Heavy Duty) முதன்முறையாக அலாய் வீல் வழங்கப்பட்டு டீயூப்லெஸ் டயருடன் ரூ.65,276 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பஞ்சர் சிரமத்தை இலகுவாக எதிர்கொள்ளும் வகையில் டிவிஎஸ் மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ளது.

2025 TVS XL100 Heavy Duty Alloy

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்எல் 100 மாடலில் அலாய் வீல் பெற்ற வேரியண்டில் 16 அங்குல அலாய் வீலுடன் டியூப்லெஸ் டயர்கள் முதன்முறையாக இந்த மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகுந்த வசதியை அளிக்கும்.

மிக முக்கியமாக சிறப்பான வெளிச்சத்தை வழங்கும் வகையிலான எல்இடி ஹெட்லைட் உடன் பாதுகாப்பிற்கு ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் (AHO) கொடுக்கப்பட்டு யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் ஸ்மார்போன் சார்ஜ் செய்ய வழி வகுக்கின்றது.

புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று சிவப்பு, நீலம் மற்றும் கிரே என மூன்று வண்ணத்துடன் மற்றபடி, வழக்கமான வேரியண்டை போல முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் உள்ளது.

பிரேக்கிங் அமைப்பில் இரண்டு டயரிலும் 110 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன், இந்த மொபெட்டின் மொத்த எடை 89 கிலோ ஆகும்.

செல்ஃப் ஸ்டார்ட் உடன் தொடர்ந்து, ஒற்றை ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு  99.7cc, ஏர்-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் 4.35PS சக்தியையும் 6.5Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மற்ற வசதிகளில் அனலாக் கிளஸ்ட்டருடன் ஹெவி டியூட்டி மாடலுக்கான இரட்டை இருக்கை அமைப்பு உள்ளது.

Variant Price (ex-showroom)
Heavy Duty Rs 42,900
HeavyDuty i-Touchstart Rs 56,300
HeavyDuty i-Touchstart Win Edition Rs 58,500
Comfort i-Touchstart Rs 58,700
TVS XL100 Heavy Duty Alloy Rs 60,000

Exit mobile version