Automobile Tamilan

2020-ல் டிவிஎஸ் செப்பெலின் க்ரூஸர் பைக் விற்பனைக்கு வெளியாகிறது

tvs zeppelian

டிவிஎஸ் மோட்டாரின் முதல் க்ரூஸர் பைக் மாடலாக வெளியாக உள்ள செப்பெலின் மாடல் முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றதாக காட்சிக்கு வந்தது. தற்பொழுது அடுத்த ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் பங்கேற்கவில்லை.

கடந்த எக்ஸ்போவில் இந்த க்ரூஸர் கான்செப்ட் மாடல் அதிகபட்சமாக 20 ஹெச்பி ஆற்றல் மற்றும் 18.5 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 220சிசி எஞ்சின் பெற்றிருக்கலாம் என குறிப்பிடப்பட்டு, கூடுதலாக இந்நிறுவனத்தின் காப்புரிமை பெறப்பட்ட ஹைபிரிட் முறையான  Integrated Starter Generator system அல்லது இ-பூஸ்ட் எனப்படுகின்ற வசதியுடன் 1200W மோட்டார் மற்றும் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்பாக டிவிஎஸ் டிராகன் கான்செப்ட் மற்றும் டிவிஎஸ் அகுலா போன்ற மாடல்கள் முறையே அப்பாச்சி 200 மற்றும் அப்பாச்சி ஆர்ஆர் 310 போன்றே இந்த கான்செப்ட் மாடலும் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என பைக்தேக்கோ தளம் குறிப்பிட்டுள்ளது.

பவர் க்ரூஸர் மாடலாக விளங்க உள்ள ஜேப்பெலின் மிகவும் ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட், 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் இரு பிரிவு இருக்கைகளுடன், முன்புற டயரில் 300 மிமீ டிஸ்க்  மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

செப்பெலின் கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தும் போது ஸ்மார்ட் பையோ கீ எனும் அம்சம் ஆன்லைன் ஆதரவினை பெறுவதுடன் ஹெச்டி ஏக்சன் கேமரா போன்றவை இடம்பெற்றிருந்தது. எனவே, இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வெளியாகலாம்.

Exit mobile version