Automobile Tamilan

அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்

ultraviolette f77

அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் ரக எலெக்ட்ரிக் F77 பைக் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 147 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன் மூன்று பேட்டரி பேக்குகளின் முழுமையான சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 150 கிமீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் பின்னணியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் செயல்படுகின்றது. 200-250சிசி வரையிலான பெட்ரோல் என்ஜின் பைக்குகளை நேரடியாக எதிர்கொள்ளும் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பெர்ஃபாமென்ஸ் ரக மின்சார பைக்காக எஃப் 77 வலம் வரவுள்ளது.

டிசைன் & ஸ்டைல்

பெர்ஃபாமென்ஸ் ரக பைக்காக வந்துள்ள F77 பைக்கில் மிக நேர்த்தியான கட்டமைப்பினை கொண்ட ஏரோடைனமிக் வடிவமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட் பெற்று நேர்த்தியான பேனல்களை கொண்டு யூஎஸ்டி ஃபோர்க்குடன் கூடிய கவர் மற்றும் Metzeler M7 டயரை பெற்று அமைந்துள்ளது.

158 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குடன் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டிருக்கின்றது. பெரும்பாலான 250-300சிசி பைக்குகளிலும் இதேபோன்ற சஸ்பென்ஷன் அமைப்பினை பெற்றுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் 320 மிமீ மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக வந்துள்ளது.  முரட்டு தன்மையுடன் விளங்குகின்ற இந்த பைக்கில் அலுமினியம் ஸ்விங்கிராம் இடம் பெற்றுள்ளது.

பேட்டரி அமைப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வெப்ப மற்றும் பேட்டரி மேலாண்மை அம்சங்களின் விரிவான பாதுகாப்பு மற்றும் சில காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பவர் ட்ரெயின்

காற்று மூலம் குளிரூட்டப்பட்கின்ற மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, அதிகபட்சமாக 25 கிலோவாட் (33.5 ஹெச்பி) 2,250 ஆர்.பி.எம் வேகத்தில் உற்பத்தி செய்கிறது மற்றும் 90 என்.எம் டார்க் வழங்குகின்றது. F77 பைக் 2.9 விநாடிகளில் 0-60 கிமீ எட்டுவதுடன், 0-100 கிமீ வேகத்தை 7.5 விநாடிகளில் எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது., இந்த பைக் மணிக்கு 147 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. எஃப்77 பைக்கில் ஒற்றை டிரான்ஸ்மிஷன் கொண்டு ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் இன்சேன் என மூன்று விதமான சவாரி நிலைகளை கொண்டுள்ளது.

பொதுவாக இந்த பைக் நிகழ் நேர ஓட்டுதலில் அதிகபட்சமாக மணிக்கு 130 முதல் 140 கிமீ வேகத்தை இலகுவாக எட்டும் திறனை கொண்டிருக்கின்றது. நிகழ் நேரத்தில் ரேஞ்சு தாராளாக மூன்று பேட்டரியின் மூலம் 120 கிமீ பயணத்தை வழங்கும் என கருதப்படுகின்றது.

டெக்னாலாஜி

மோட்டாரை இயக்குவதற்கு நீக்கும் வகையிலான 3 லித்தியம் அயன் பேட்டரி பேக்குகளுடன் இணைக்கப்பட்ட 4.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நிலையான சார்ஜர் வழியாக முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரமும், வேகமான சார்ஜர் வாயிலாக 1.5 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்ற இயலும். இந்த பைக்கினை இயக்க மூன்று பேட்டரி பேக்குகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் உள்ள சார்ஜர் மூலமாக 1 கிலோ வாட் ஸ்டாண்டர்டு சார்ஜர் நிரந்தரமாக வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் வாயிலாக 5 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். கூடுதலாக ரூ.20,000 மதிப்பில் 3 கிலோ வாட் சார்ஜரை ஏற்படுத்திக் கொள்ளும் போது 1.5 மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போன் வாயிலாக இணைக்க பிரத்தியேகமான ஆப் மூலம் F77 பைக்கில் இணைக்க இயலும். 5.0 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்றுள்ளது. இந்த பைக்கில் இன் பில்ட் 4ஜி சிம் கார்டு ஆதரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரம்பு, பேட்டரி சதவீதம், சராசரி வேகம் மற்றும் இருப்பிடம் போன்ற பயனுள்ள சவாரி தகவல்களைக் காண்பிக்கும். இது உள்ளமைக்கப்பட்ட சென்சார்கள், இம்பேக்ட் சென்சார் மற்றும் அவசர தொடர்பு எச்சரிக்கை கொண்டுள்ளது. ஆப் வாயிலாக பல்வேறு செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

விலை

புதிய அல்ட்ராவைலெட் F77 பைக்கில் மொத்தமாக மூன்று விதமான மாறுபட்ட வேரியண்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. லைட்டனிங், ஷேடோ மற்றும் லேசர் என மூன்று விதமான மாறபட்ட ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ளது.  எஃப் 77 பைக்கின் விலை ரூ.3.00 லட்சம் முதல் ரூ.3.25 லட்சம் ஆன்-ரோடு பெங்களூரு அமைந்துள்ளது.

இந்த பைக் தயாரிப்பு நிறுவனம், சிறிய வேகமான சார்ஜர், சார்ஜிங் பாட், கிராஷிங் கார்ட்ஸ் மற்றும் பேனியர் போன்ற ஆக்செரிஸ்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

வருகை விபரம்

அல்ட்ராவைலெட் எஃப் 77 பைக்கிற்கான முன்பதிவு தற்போது இந்நிறுவனத்தின் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முன்பதிவு தற்போது முதல் நடைபெற்று வந்தாலும் எஃப் 77 பைக்கின் விநியோகம் 2020 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் தொடங்கவே இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

Exit mobile version