• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

அல்ட்ராவைலெட் F77 சூப்பர்ஸ்டீரிட் விற்பனைக்கு அறிமுகமானது.!

by MR.Durai
31 January 2025, 4:58 pm
in Bike News
0
ShareTweetSend

அல்ட்ராவைலெட் F77 சூப்பர்ஸ்டீரிட்

அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் மேக் 2 மாடலின் அடிப்படையில் புதிய F77 சூப்பர்ஸ்டீரிட் பைக் விற்பனைக்கு ரூ.2.99 லட்சம் முதல் ரூ.3.99 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வந்துள்ள புதிய மாடல் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை பெற்று பெர்ஃபாமென்ஸ் சார்ந்த மேம்பாடுகளை கொண்டுள்ளது.

மேக் 2 எலெக்ட்ரிக் பைக்கில் உள்ள அதே பேட்டரி ஆப்ஷனை பகிர்ந்து கொண்டுள்ள புதிய F77 சூப்பர்ஸ்டீரிட் Recon இ பைக்கில் 10.3kWh பேட்டரி கொண்டு 30kW மோட்டார் மற்றும் 100 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்சமாக 323 கிமீ தூரம் பயணிக்கும் திறனுடன், மணிக்கு 155 கிமீ வேகத்தை எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து, 7.1 kWh பேட்டரி கொண்டு 27 kW (36.2 hp) பவர் மற்றும் 90 Nm டார்க் வெளிப்படுத்தும் மாடல் அதிகபட்சமாக  211 கிமீ தூரம் பயணிக்கும் திறனுடன், மணிக்கு 155 கிமீ வேகத்தை எட்டும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேக் 2 போலவே இந்த F77 சூப்பர் ஸ்ட்ரீட்டையும் மூன்று நிலை டிராக்‌ஷன் கண்ட்ரோல், 10 நிலை ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங், டைனமிக் ஸ்டெபிலிட்டி கட்டுப்பாடு, டூயல் சேனல் ஏபிஎஸ், ஹில் ஹோல்ட், ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் TFT கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட புதிய பைக்கில் ஹேண்டில் பார் மாற்றப்பட்டு, சிறிய அளவில் எல்இடி ஹெட்லைட் பேனல்கள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

F77 சூப்பர் ஸ்ட்ரீட் பைக்கிற்கான முன்பதிவு பிப்ரவரி 1 ஆம் தேதி துவங்கும் நிலையில் மார்ச் 1 ஆம் தேதிக்குள் டெலிவரி துவங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Ultraviolette F77 Superstreet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version