Automobile Tamilan

சாகசங்களுக்கான அல்ட்ராவைலெட் ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக் வெளியானது.!

Ultraviolette Shockwave

அல்ட்ராவைலெட் நிறுவனத்தின் அட்வென்ச்சர் சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக்கின் டிசைன் என்டூரா மாடல்களை போல அமைந்து 4Kwh பேட்டரி பேக்கினை பெற்று விலை ரூ.1.50 லட்சம் அறிமுக சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.25,000 தள்ளுபடியில் கிடைக்கும் பிறகு விலை ரூ.1.75 லட்சத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ள நிலையில் டெசராக்ட் இ-ஸ்கூட்டரை போல இந்த மாடலும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள  90/90-R19 டயருடன் பின்புறத்தில் 110/90-R17 டயரை பெற்று முன்பக்கத்தில் 200 மிமீ பயணிக்கின்ற அப்சைடு டவுன் ஃபோர்க் உடன் பின்புறத்தில் 180 மிமீ பயணிக்கும் மோனோஷாக் அப்சர்பரை பெற்றுள்ள ஷாக்வேவ் பைக்கில் உள்ள 4kwh பேட்டரி அதிகபட்சமாக 14.7hp பவர் மற்றும் 505Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மணிக்கு 120 கிமீ வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 165 கிமீ வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

கருப்பு உடன் மஞ்சள், வெள்ளை உடன் சிவப்பு நிறத்தை பெற்றுள்ள ஷாக்வேவ் மாடலுக்கான் முன்பதிவு நடைபெறுகின்றது.

Exit mobile version