Automobile Tamilan

ஷாக்வேவ் எலக்ட்ரிக் பைக்கிற்கான தள்ளுபடி நீட்டித்த அல்ட்ராவைலெட்

Ultraviolette Shockwave

அல்ட்ராவைலெட் வெளியிட்டுள்ள புதிய ஷாக்வேவ் என்டூரா ரக அட்வென்ச்சர் மாடலுக்கான ரூ.25,000 தள்ளுபடி சலுகையை மேலும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, 2,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.50 லட்சத்திலும், பிறகு இந்த மாடல் விலை ரூ.1.75 லட்சம் ஆக கிடைக்கும்.

ரூ.999 கட்டணமாக செலுத்தி முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஷாக்வேவ் டெலிவரியை 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் பைக்கில் 4kwh பேட்டரி அதிகபட்சமாக 14.7hp பவர் மற்றும் 505Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மணிக்கு 120 கிமீ வேகத்துடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 165 கிமீ வழங்கும் என சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 19 அங்குல வீல் பெற்று சஸ்பென்ஷன் அமைப்பில் 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொண்டிருக்கின்ற நிலையில், 17 அங்குல பின்புற வீலில் டிஸ்க் பிரேக்குடன், மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது சுவிட்சபிள் முறையில் கிடைக்கின்றது.

Exit mobile version